Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் சீருடை - நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!!

பாடசாலைகளில் சீருடை - நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!!

11 மார்கழி 2023 திங்கள் 11:06 | பார்வைகள் : 5140


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சீருடையை கட்டாயமாக்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவில் அது தொடர்பான அறிவித்தல்களையும், பரீட்சாத்த முயற்சியினையும் மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் Gabriel Attal தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த சீருடை தொடர்பில் இதுவரை வெளியான செய்திகளை நாம் இங்கு தொகுத்துள்ளோம்.

 

சீருடை!

ஒரு மாணவனுக்கு ஐந்து போலோ டி.சேர்ட்டுக்களும், இரண்டு மேலங்கிகளும், இரண்டு முழுநீள காற்சட்டைகளும் வழங்கப்படலாம் என அறிய முடிகிறது.  நாடு முழுவதும் ஒரே மாதிரியான ‘அடையாளம்’ காணக்கூடிய சீருடைகளையும், ஒவ்வொரு பாடசாலைகளும் தங்களுக்குரிய சிறிய மாற்றங்களை செய்துகொள்ள முடியும் எனவும் அறிய முடிகிறது.

 

விலை?

மேற்படி சீருடைகள் கொண்ட பொதி ஒன்றின் விலை 200 யூரோக்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதில் பாதித்தொகையை அரசு வழங்கும் எனவும் மீதியை உள்ளூர் நகரசபை வழங்கும் எனவும் அறிய முடிகிறது.

 

உற்பத்தி!

சீருடைகளை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் தேடி வருகிறது. அனைத்து உற்பத்தியாளர்களும் உள்ளூரில் உள்ள பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

இரண்டு வருட பரிசோதனை!

சீருடைகள் நிரந்தரமாக நடைமுறைக்கு கொண்டுவருதற்கு முன்னர், இரண்டு ஆண்டுகள் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தப்படும் என அறிய முடிகிறது. காலநிலைக்கு ஏற்றாப்போல் சீருடைகளின் தன்மைகள், அறிவியல் ரீதியான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே நிரந்தமான ஒரு சீருடை தயாராகும் எனவும் அறிய  முடிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்