கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

11 மார்கழி 2023 திங்கள் 12:08 | பார்வைகள் : 5653
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
போலியான கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கனடாவில் வசிக்கும், குறித்த இளைஞரின் உறவினர் ஒருவர் இலங்கையிலுள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1