சமந்தாவின் புதிய அவதாரம்...
11 மார்கழி 2023 திங்கள் 15:12 | பார்வைகள் : 9039
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகை சமந்தா திரையுலகில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தாலும் மீண்டும் விரைவில் அவர் பிசியான நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பல புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டிவி தொடர்களை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது
இது குறித்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை கொடுப்பேன். புதிய சிந்தனை மற்றும் மன வெளிப்பாடு உள்ளடக்கத்தை பிரதிநிதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
நமது சமூக கட்டமைப்பின் வலிமை மற்றும் சிக்கலான தன்மையை பற்றி பேசும் கதைகளை எங்கள் நிறுவனத்தின் மூலம் படமாக்குவோம். இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு இடமாகவும் இருக்கும். திரைப்பட தயாரிப்பு தொழிலை அர்த்தமுள்ள, உண்மையான மற்றும் உலகளாவிய கதையை சொல்ல ஒரு தளமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்த நிறுவனத்தை நானும் அதே போல் பயன்படுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan