அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
11 மார்கழி 2023 திங்கள் 15:27 | பார்வைகள் : 2870
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (11) வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322.18 ரூபாவாகவும், 332.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.83 ரூபாவாகவும், 331.66 ரூபாவாகவும் காணப்பட்டது.
எனினும், மத்திய கிழக்கு உட்பட, ஏனைய பிரதான நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.