Paristamil Navigation Paristamil advert login

நண்டு சூப்

நண்டு சூப்

11 மார்கழி 2023 திங்கள் 15:25 | பார்வைகள் : 2263


நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது.

நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சளி, இரும்மல், தொண்டை வலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது.தலை வலி, தலை பாரம், சளி, இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் நண்டு சூப் செய்து சாப்பிட்டால் போதும்.

நல்ல நிவாரணம் கிடைக்கும். பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த நண்டு சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது.

தேவையான பொருட்கள்:

நண்டு - 2

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - சிறு துண்டு

மிளகு - அரை ஸ்பூன்

சீரகம் - கால் ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

பூண்டு - 4 பல்

பச்சைமிளகாய் - 2

பட்டை - தேவையான அளவு

பிரியாணி இலை - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வரும் அளவுக்கு தட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இஞ்சி, பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்ற வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும். நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போட வேண்டும். நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும். இதோ சுவையான நண்டு சூப் ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்