AI தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்
12 மார்கழி 2023 செவ்வாய் 07:20 | பார்வைகள் : 1212
செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் விரிவான விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) ஏற்றுள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னதாக, செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கு இடையே 37 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
சட்டத்தை மேற்பார்வையிட்ட ஐரோப்பிய ஆணையர் Thierry Breton, இந்த ஒப்பந்தத்தை ஒரு வரலாற்று தருணம் என்று விவரித்தார்.
செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி, சமூக ஊடகங்கள் மற்றும் தேடுபொறிகளும் புதிய சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும். X, TikTok மற்றும் Google உட்பட அனைத்து முக்கிய ஓன்லைன் தளங்களும் இந்த சட்டத்தின் கீழ் வரும்.
France மற்றும் Germany நாடுகள் ஜேர்மனியும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஒப்புக் கொண்டாலும், இந்த நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் சட்டத்தை எளிதாக்க விரும்புவதாக, ஸ்பெயினின் AI மாநில செயலாளர் Carme Artigas கூறியுள்ளார்.
சட்டத்தின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இச்சட்டம் 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிமீறலுக்கு 35 மில்லியன் யூரோ (இளநகை பணமதிப்பில் தோராயமாக ரூ. 1338 கோடி) அல்லது நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் 7 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.