இத்தாலியில் கோர விபத்து.... தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில்
12 மார்கழி 2023 செவ்வாய் 08:07 | பார்வைகள் : 10489
இத்தாலி நாட்டின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.
அங்குள்ள பென்சா-போர்லி பகுதிகளுக்கு இடையே சென்றபோது அதே தண்டவாளத்தில் மற்றொரு ரெயிலும் வந்து கொண்டிருந்தது.
இதனையறிந்த டிரைவர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
எனினும் இரு ரெயிலும் நேருக்கு நேர் மோதியதில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
அப்போது ரெயிலுக்குள் இருந்தவர்கள் முன்னும் பின்னுமாக விழுந்தனர்.
இதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக சில மணி நேரம் ரெயில் சேவை இயக்கப்படவில்லை.
இதற்கிடையே ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் தொடர்பில் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இத்தாலி போக்குவரத்து துறை மந்திரி மேட்டியோ சல்வினி தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan