Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் பரவும் இரண்டு தொற்றுநோய்கள்...

சுவிட்சர்லாந்தில்  பரவும் இரண்டு தொற்றுநோய்கள்...

12 மார்கழி 2023 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 7441


 ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் பொதுவாக ப்ளூ காய்ச்சல் மக்களிடையே பரவ ஆரம்பிக்கும்.

ஆனால், கொவிட் காலகட்டத்துக்குப் பிறகு, ப்ளூவைவிட கொவிட் அதிகமாக பரவி வருகின்றது.

சுவிட்சர்லாந்து பெருமளவில் கொவிட் தொற்றை எதிர்கொண்டுவரும் நிலையில் ப்ளூ காய்ச்சலும் பரவிவருகிறது.

ப்ளூ காய்ச்சலைவிட கொவிட் தொற்று அதிகம் காணப்படுவதாக சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கோடையில் அதிகரிக்கத் துவங்கிய கொவிட் கடந்த மாதத்தில் அதிக அளவில் பரவியுள்ளது. சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவர்களை நாடுவோர் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவருகிறது.

இன்னொரு விடயம், ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையைவிட கொவிட் ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும், ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்