Paristamil Navigation Paristamil advert login

இரவில் பால் குடிப்பது நல்லதா..?

இரவில் பால் குடிப்பது நல்லதா..?

12 மார்கழி 2023 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 2199


இரவு படுப்பதற்கு முன் ஒரு க்ளாஸ் பால் குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் பால் அருந்துவது நம் மனதிற்கு இதமளிப்பதோடு உடலுக்கும் நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரவில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: பாலில் உள்ள ட்ரைடோபான் என்ற அமினோ ஆசிட் தூக்கத்தை வரவழைக்க கூடியவை. நம் உடலில் மெலடோனின் மற்றும் செரோடோனின் உருவாவதற்கு முக்கிய காரணமாக ட்ரைடோபான் இருக்கிறது. மெலடோனினை தூக்கம் வரவழைக்கும் ஹார்மோன் என்றே அழைக்கலாம். செரோடோனின் நமது மனநிலையை ஒழுங்குபடுதுவதோடு பசியை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த ட்ரைடோபான் தூக்கத்தை தூண்டுவதோடு கல்லீரலில் நியாசின் உற்பத்தியாகவும் காரணமாக இருக்கிறது. இந்த நியாசின் நமது மெடபாலிஸம் மற்றும் டிஎன்ஏ சிந்தெஸிஸ்க்கு உதவுவதோடு உடலின் முக்கியமான செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது.

இரவில் பால் அருந்தினால் நிம்மதியான தூக்கம் வருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக வயதானவர்களுக்கு இது மிகவும் உதவுகிறது. ஆனால் இது எல்லாருக்கும் சரியாக இருக்குமா எனக் கூற முடியாது. பால் சார்ந்த பொருட்களின் மீது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலோ, நீங்கள் டயட்டில் இருந்தாலோ மற்றும் உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு இரவு படுப்பதற்கு எவ்வளவு பால் அருந்தலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இரவில் பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? ஆம், நிச்சயம் அதிகரிக்கும். இரவில் பால் அருந்துவதால் செரிமானம் மெதுவாக நடைபெறுகிறது. இதன் காரணமாக கல்லீரல் செயல்பாடு பாதிப்படைகிறது. இது நமது உடலில் மெடபாலிக் விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிறது. தினமும் இரவில் பால் அருந்தினால் உங்கள் உடல் எடை கணிசமக உயரும். மேலும் இரவில் பால் குடிப்பதால் உடலின் சர்காடியன் ரிதமை தொந்தரவு செய்கிறது. ஆகையால் எதையும் அளவாக பருகுங்கள்.

இரவில் பெண்கள் பால் குடிக்கலாமா? இரவு நேரத்தில் பெண்கள் பால் அருந்துவது அவ்வளவு நல்லதல்ல என்றே கூறப்படுகிறது. ஹார்மோன் மாற்றம் உள்ள பெண்கள் இரவில் அருந்துவதை தவிர்ப்பதே நல்லது. அதிகப்படியான பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. குறிப்பாக PCOS இருப்பவர்களுக்கு இதனால் நீரிழிவு நோய் வரவும் வாய்ப்புள்ளது.

பாலில் ப்ரோஜெஸ்டெரோன் மற்றும் எஸ்ட்ரோஜென் போன்ற பல்வேறு ஹார்மோன்கள் இருக்கிறது. இவை பிரச்சனையை உருவாக்கக் கூடியவை. பாலில் உள்ள ஊட்டச்சத்திற்காக அதை அளவாக பருகலாம். உங்களுக்கு கால்சியம், புரதச்சத்து பற்றாக்குறை இருந்தால் தாராளமாக பால் அருந்தலாம். இப்படி எந்த குறைபாடும் இல்லாதவர்கள் பாலிற்கு பதிலாக ராகி, பச்சை இலை காய்கறிகள், எள் ஆகியவற்றை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு நேரத்தில் பால் அருந்துவது அவ்வளவு பெரிய பிரச்சனையை கொண்டு வராது. இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும். அதே சமயத்தில் உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் இரவில் பால் குடிப்பதை தவிருங்கள். அதேப்போல் ஹார்மோன் சமநிலை இல்லாத பெண்களும் அதிகப்படியான பால் அருந்தினால் உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் மூலம் தெரிந்துகொள்வது என்னவென்றால் இரவில் ஒரு க்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்