Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ள ஹமாஸ் அமைப்பு

 இஸ்ரேலுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ள ஹமாஸ் அமைப்பு

12 மார்கழி 2023 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 3912


ஹமாஸ் இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7ம் திகதி தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து சுமார் 240 பேர்களை ஹமாஸ் காசாவுக்கு கடத்திச் சென்றது.

இஸ்ரேலியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் உள்ளடக்கிய இந்த பிணைக்கைதிகளில் கணிசமானோர், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.


ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை 1:3 என்ற விகிதத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் ஹமாஸ் 80 பிணைக்கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 240 சிறைக்கைதிகளை இதுவரை விடுவித்துள்ளது.


இதனையடுத்து போர் தாக்குதல் மீண்டும் தொடங்கியதில், இம்முறை தெற்கு காசாவை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி வருகிறது.

வடக்கு காசா மீதான தாக்குதல் காரணமாக, தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.


ஹமாஸ் அமைப்பினர் என்ற குற்றச்சாட்டில், அப்பாவி பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்படுவதாக ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் வசமிருக்கும் பிணைக்கைதிகள் எவரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்தி தொடர்பாளரான அபு ஒபையா என்பவர், “இஸ்ரேலிய படையுடனான எங்களது யுத்தம் தொடரும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தெருக்கள் தோறும் சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லை.


எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்களது புனிதப் போர் தொடரும்” என்று அறிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் உயிருக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் இருதரப்பு இடையிலான சிக்கலை அதிகரித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்