Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்கும் ஐக்கிய அமீரகம்

இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்கும் ஐக்கிய அமீரகம்

12 மார்கழி 2023 செவ்வாய் 08:52 | பார்வைகள் : 3705


இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் சர்வதேச நிறுவனங்களின் உணவு பண்டங்கள், குளிர் பானங்கள், அழகுசாதனப் பொருட்கள் உட்பட ஃபேஷன் பிராண்டுகள் அனைத்தையும் கைவிட ஐக்கிய அமீரக மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மன்றம் முன்னெடுத்த போர் நிறுத்த கோரிக்கை அமெரிக்காவால் முறியடிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா மீதான தாக்குதலை அதிகரித்துள்ளது.

ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி, அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

காஸாவில் இனி ஒளிந்துகொள்ள அல்லது பாதுகாப்பான இடம் என்பது இல்லை என்றே மனித உரிமைகள் குழுக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் அல்லது, நிதியுதவி மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க அரபு நாடுகளின் மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கை தற்போது தீயாக பரவி, அமெரிக்காவின் Starbucks நிறுவனம் தங்களது சந்தை மதிப்பில் சுமார் 11 பில்லியன் டொலர், இந்திய பண மதிப்பில் சுமார் ரூ 9169 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

Starbucks மட்டுமின்றி, இஸ்ரேல் ஆதரவு மேற்கத்திய நாடுகளின் பல நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவே ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அரபு நாடுகளில் உள்ள மக்கள், தற்போது உள்ளூர் உணவு பண்டங்களையும், உள்ளூர் தயாரிப்புகளையும் அதிகமாக நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான நாடான எகிப்தில் முன்னெடுக்கப்பட்ட புறக்கணிப்பு கோரிக்கை அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் துருக்கி உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளின் மக்கள் இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களின் பொருட்களை புறக்கணித்து வருவதாகவே கூறப்படுகிறது.

கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களில் இனி செலவிட முடியாது என அரபு நாடுகளின் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்கள் பலர் உள்ளூர் மக்களின் அழைப்பை ஏற்று இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணித்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்