Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவை எச்சரித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி...

அமெரிக்காவை எச்சரித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி...

12 மார்கழி 2023 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 6794


ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார். 

மேலும் உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் Chuck Schumer மற்றும் செனட் குடியரசுக் கட்சித் தலைவர் Mitch McConnell ஆகியோரின் கூட்டு அழைப்பின் பேரில் அனைத்து செனட்டர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 

பின்னர் அவர் சபாநாயகர் மைக் ஜான்சனை சந்தித்து பேச உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பிற்காக வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளார்.

மேலும் அவர் உக்ரைனின் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்களையும் சந்திக்கிறார். 

இந்த நிலையில் National Defense Universityயில் பேசிய ஜெலென்ஸ்கி, 'உக்ரைனுக்கு உதவத் தவறினால், ஐரோப்பாவில் ஜனநாயகத்தை சிதைக்கும் விளாடிமிர் புடினின் கனவுகள் நனவாகும்.

நண்பர்களே Capitol Hill-யில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஈர்க்கப்பட்ட யாராவது இருந்தால், உங்களிடம் வெளிப்படையாக கூறுகிறேன் அது புடின் மற்றும் அவரது குழுவால் மட்டுமே' என்றார்.


மேலும் பேசிய அவர், 'நீங்கள் உக்ரைனை நம்பலாம், மேலும் உங்களை நம்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் புடின் தோற்க வேண்டும்' என தெரிவித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்