Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் விடாமுயற்சி ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?

 அஜித்தின் விடாமுயற்சி ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?

13 மார்கழி 2023 புதன் 05:08 | பார்வைகள் : 5164


அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

இந்நிலையில் அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. இந்நிலையில் ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது மீண்டும் அஜர்பைஜானுக்கு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்ற தகவல் ஒன்று பரவி வருகிறது. இளம் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையைப் பற்றிய ஒரு கதைதான் சில மாற்றங்களோடு மகிழ் திருமேனி விடாமுயற்சி கதையாக உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய மனைவியான த்ரிஷாவை ஒரு கூட்டம் கடத்திவிட அவரை தேடி செல்லும் அஜித் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்