Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீதான தனது படையெடுப்பிற்கு நிதி திரட்டும் ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைன் மீதான தனது படையெடுப்பிற்கு நிதி திரட்டும் ரஷ்ய ஜனாதிபதி

13 மார்கழி 2023 புதன் 08:45 | பார்வைகள் : 3667


உக்ரைன் மீதான தனது படையெடுப்பிற்கு நிதி திரட்டும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் உலகின் பிற இடங்களில் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு நிதியளிக்க ஆப்பிரிக்க நாடுகளையும் அவற்றின் வளங்களையும் வாக்னர் கூலிப்படையினர் கொள்ளையிட்டு வருவாதாக கூறுகின்றனர்.

மட்டுமின்றி, புடினுக்கு பாரிய வருவாய் ஆதாரத்தை வழங்குவதற்கு என வாக்னர் கூலிப்படையினர் ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

மேலும், வாக்னர் குழுவானது ரஷ்யாவுக்கு நிதி திரட்டுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆப்பிரிக்கா முழுவதும் வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மையைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில், ஆப்பிரிக்காவில் வாக்னர் கூலிப்படையினரின் செயல்பாடுகள் கண்டம் முழுவதும் வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மையை பரப்பியதுடன் மாதாந்திர வருவாயில் மில்லியன் கணக்கான டொலர்களை ஈட்டி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு நிதியளித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் மாதம் 80 மில்லியன் பவுண்டுகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ 837 கோடி அளவுக்கு ரஷ்யா வருவாய் ஈட்டி வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் குற்றச்செயல்களை எதிர்க்கும் நாடுகள் கண்டிப்பாக ஆப்பிரிக்க தங்கம் தொடர்பான ரஷ்யாவின் வர்த்தகத்தையும் தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ரஷ்யாவால் கடத்தப்படும் தங்கத்தை வியாபாரப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.


உக்ரைன் மீதான போர் தொடங்கிய பின்னர் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள தங்கச் சுரங்கங்களில் இருந்து மட்டும் ரஷ்யா இதுவரை 2 பில்லியன் பவுண்டுகள் வரையில் சட்டவிரோதமாக வருவாய் ஈட்டியுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்