Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 

13 மார்கழி 2023 புதன் 09:13 | பார்வைகள் : 8489


சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் சுவாசம் தொடர்பான நோய்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.

இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்க கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூழலில் சிங்கப்பூர் மருத்துவமனைகள் நாட்டில் கொரோனா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய தொற்று அலைகளைத் தொடர்ந்து தேவைப்பட்டால் அவற்றின் திறனை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்