Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : சென்ற ஆண்டை விட 330% சதவீதத்தால் அதிகரித்த யூத எதிர்ப்பு தாக்குதல்கள்!!

பரிஸ் : சென்ற ஆண்டை விட 330% சதவீதத்தால் அதிகரித்த யூத எதிர்ப்பு தாக்குதல்கள்!!

13 மார்கழி 2023 புதன் 11:07 | பார்வைகள் : 2531


சென்ற ஆண்டை விடவும், இந்த 2023 ஆம் ஆண்டில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பரிசில் அதிகரித்துள்ளன. 330% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் இவ்வருடத்தில் 550 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. நாஸிப்படையின் ஸ்வாஸ்திகா இலட்சணைகளை வரைவது, யூதர்களை தாக்குவது, கல்லறைகளை சேதப்படுத்துவது என பல எதிர்ப்பு சம்பவங்கள் பரிசில் பதிவாகியுள்ளன.

பரிசில் இவ்வருடத்தில் 175 பேர் மேற்படி குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒக்டோபர் 7 ஆம் திகதி (இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பமான அன்று) முதல் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மொத்தமாக இடம்பெற்ற 550 சம்பவங்களில் 484 சம்பவங்கள் இந்த திகதியின் பின்னர் இடம்பெற்றவையாகும்.

மேற்படி தகவல்களை நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் காவல்துறைத் தலைமை அதிகாரி Laurent Nuñez வெளியிட்டார்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாத இறுதியில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கையில், நாடு முழுவதும் இவ்வருடத்தில் 1,800 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவானதாக தெரிவித்திருந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்