Paristamil Navigation Paristamil advert login

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்

13 மார்கழி 2023 புதன் 12:31 | பார்வைகள் : 1900


வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம்.அது உணவுக்கு சுவையைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் பின்பு பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து,பின் குளீர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பெக்கை போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

வெந்தயத்தை 2 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.நீர் குளிர்ந்ததும்,வெந்தயத்தை எடுத்து நன்கு மசித்து முகத்தில் தடவி சில நிமிடங்களுக்கு பிறகு அதே நீரில் முகத்தை கழுவுங்கள்.முகப்பருக்களை விரைவில் குணப்படுத்தலாம்.

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்த பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

தேனுடன் வெந்தயத்தை பொடி செய்து நன்றாக கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்த பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் தடவினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் நீங்கும்.

வெந்தயத்தில் விற்றமின் C இருப்பதால் இது முகத்தை பளிச்சென மாற்றும். ஊற வைத்து அரைத்த வெந்தயத்தில் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளபளக்கும்.

சருமத்திற்கு சிறந்த இயற்கை அழகை தரும் வெந்தயத்தை மேற்குறிப்பிட்டுள்ள முறையின் படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சிறந்த பலனை பெறலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்