Paristamil Navigation Paristamil advert login

சிம் அட்டைகள் மூலம் மோசடி! - ₤600,000 யூரோக்கள் வரை கொள்ளையிட்ட மூவர் கைது!

சிம் அட்டைகள் மூலம் மோசடி! - ₤600,000 யூரோக்கள் வரை கொள்ளையிட்ட மூவர் கைது!

13 மார்கழி 2023 புதன் 16:22 | பார்வைகள் : 3908


சிம் அட்டைகளை (carte SIM) பயன்படுத்தி ₤600,000 யூரோக்கள் வரை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் 60 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பொதுமக்களின் சிம் அட்டைகளை திருடி, இணையத்தளத்தில் குறித்த சிம் இலக்கத்தினை பயன்படுத்தி ஆடம்பர பொருட்களை இணையத்தளமூடாக வாங்கியுள்ளனர். அதேவேளை, OTP (ஒருதடவை மட்டும் பயன்படுத்தப்படும் இரகசிய இலக்கம்) பயன்படுத்தி வங்கிகளிலும் பணம் கொள்ளையிட்டுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முடிவில் இந்த வாரத்தில் இல் து பிரான்சுக்குள் மூவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களால் கிட்டத்தட்ட 60 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ₤600,000 யூரோக்கள் வரை மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்