Paristamil Navigation Paristamil advert login

சென் நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு! - முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

சென் நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு! - முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

14 மார்கழி 2023 வியாழன் 07:02 | பார்வைகள் : 3560


தொடர் மழை காரணமாக சென் நதியின் நீர்மட்டம் மூன்று மீற்றர் உயரத்தினை தொட்டுள்ளது. சில முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவில் இருந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மாலை அதன் உயரம் 3.22 மீற்றராக உயர்வடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் Pont de l'Archevêché பகுதியில் இருந்து Pont de Sully வரை சென் நதிக்கரை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Conflans-Sainte-Honorine (Val-d'Oise) பகுதியிலும் நதிக்கரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி அன்று சென் நதியின் நீர் மட்டம் 6.10 மீற்றர்களாக பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக 1910 ஆம் ஆண்டு பரிசில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது 8.62 மீற்றர் நீர்மட்டம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்