வெள்ள அனர்த்தம் தொடர்கிறது… சிறைச்சாலை இருந்து அகதிகள் வெளியேற்றம்!!
14 மார்கழி 2023 வியாழன் 08:24 | பார்வைகள் : 4840
நேற்று புதன்கிழமை பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை இந்த எச்சரிக்கை தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Charente , Charente -Maritime , Corrèze , Dordogne மற்றும் Gironde ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, Charente மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்று வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளது. 144 கைதிகள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.