Paristamil Navigation Paristamil advert login

'சீயான் 62' படம் குறித்து ஜிவி பிரகாஷ்..!

'சீயான் 62' படம் குறித்து ஜிவி பிரகாஷ்..!

14 மார்கழி 2023 வியாழன் 09:03 | பார்வைகள் : 1365


விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை எஸ்.யூ. அருண்குமார் என்பவர் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் விக்ரம், அருண்குமார் படத்தில் இணைந்தது எப்படி என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

’தங்கலான்’ படத்தின் டீசர் வெளியானவுடன் தன்னை விக்ரம் அழைத்து 30 நிமிடங்கள் பேசியதாகவும் இந்த படத்தின் பின்னணி இசை சூப்பர் என்று தன்னை பாராட்டியதாகவும் தெரிவித்த ஜீவி பிரகாஷ், தன்னுடைய அடுத்த படமான ’சியான் 62’ படத்திற்கும் உங்களால் இசையமைக்க முடியுமா என்று கேட்டதாகவும் நானும் மகிழ்ச்சியுடன் ஒப்பு கொண்டேன் என்றும் இப்படித்தான் அந்த படத்தில் நான் கமிட்டானேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ’தெய்வத்திருமகள்’ ’தாண்டவம்’ ஆகிய படங்களில் விக்ரமுடன் அடுத்தடுத்த பணிபுரிந்த ஜிவி பிரகாஷ், மீண்டும் அடுத்தடுத்து ’தங்கலான்’ ’சியான் 62’ என தொடர்ச்சியாக பணிபுரிய இருக்கும் நிலையில் இந்த கூட்டணி வெற்றி கூட்டணி ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ் யூ அருண் குமார் இயக்கத்தில் உருவான ’சித்தா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விக்ரமுடன் அவர் இணைந்துள்ள திரைப்படம் பரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்