உலகின் இரண்டாவது அதிக வயதான பெண் மரணம்
14 மார்கழி 2023 வியாழன் 09:54 | பார்வைகள் : 3919
உலகின் 2 ஆவது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி உயிரிழந்துள்ளார்.
மனிதர்கள் அதிகமான ஆயுட் காலத்துடன் வாழக்கூடிய நாடாக ஜப்பான் இருகிறது. உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் முதியோல் இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
116 வயதுடைய அந்த மூதாட்டி தனக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக இவர் காணப்பட்டார்.
கின்னஸ் உலக சாதனைகள் ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
இந்த மூதாட்டிக்கு உடல் ரீதியாக எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
அவர் தனது 70 வயதில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு மட்டும் முறிந்துள்ளது.
இதை தவிர அவரது உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவருடைய மறைவிற்கு பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.