Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : இனிமேல் சுற்றுலா பேருந்துகளுக்கு கட்டணம்!!

பரிஸ் : இனிமேல் சுற்றுலா பேருந்துகளுக்கு கட்டணம்!!

14 மார்கழி 2023 வியாழன் 10:14 | பார்வைகள் : 5749


சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் இனிமேல் நகரசபைக்கு கட்டணம் செலுத்தவேண்டும் எனும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தலைநகர் பரிசில் Tootbus மற்றும் Bigbus போன்ற நிறுவனங்கள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகளுக்கு பயணிகளிடம் கட்டணம் பெறப்பட்டாலும், சேவை வழங்குனர்கள் நகரசபைக்கு கட்டணம் எதையும் செலுத்துவதில்லை. ஆனால் வரும் 2024 ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் கட்டணம் செலுத்தப்படவேண்டும்.

நேற்று புதன்கிழமை பரிஸ் நகரசபையில் இதற்குரிய வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. அதன் போது பெருமளவான ஆதரவு வாக்குகள் பெறப்பட்டு இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதையடுத்து 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகளுக்கான பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் நகரசபைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏனைய நகரசபைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பரிசில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிய முடிகிறது. வருடத்துக்கு 6,200 யூரோக்கள் (ஏனைய நகரசபை பகுதிகளில் 3,100 யூரோக்கள்) வசூலிக்கப்பட உள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்