இலங்கையில் தொலைபேசிகளின் விலைகள் பாரியவில் உயர்வு!

14 மார்கழி 2023 வியாழன் 12:27 | பார்வைகள் : 6146
இலங்கையில் தொலைபேசிகளின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வற் வரி அதிகரிப்புக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையாலேயே தொலைபேசிகளின் விலைகளில் உயர்வு ஏற்படும் எனவும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் உயரும் எனவும், ஏற்கனவே சந்தையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ள சூழலில் வற் வரி அதிகரிப்பால் மேலும் விலை உயர்வுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் காணரமான தொலைபேசிகளின் விலைகள் 200 வீதத்துக்கும் அதிகமான அதிகரிப்பை சந்தித்தன.
இந்நிலையில், வற் வரி அதிகரிப்பும் விலை உயர்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025