யோகா, நடனம், சமையல்., மனிதர்களை போல் இயங்கும் Tesla ரோபோ
15 மார்கழி 2023 வெள்ளி 08:09 | பார்வைகள் : 1578
Tesla நிறுவனம் Optimus-Gen 2 என்ற புதிய மனித உருவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளது.
Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) X தளத்தில் மனிதனைப் போன்ற பணிகளைச் செய்யும் திறன் கொண்ட ஒரு மனித ரோபோவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
Tesla நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் Tesla AI Day தினத்தில் Optimus-ன் prototype பதிப்பை முதலில் வெளியிட்டது. பல மாதங்களுக்குப் பிறகு, இப்போது அதே ரோபோ மிகவும் மேம்பட்ட திறன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவின் மார்பில் TESLA பிராண்ட் லோகோவும் உள்ளது. ரோபோவின் நிலைத்தன்மை மற்றும் உடல் கட்டுப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.
எலோன் மஸ்க் வெளியிட்ட இந்த வீடியோவில், இந்த ரோபோ தனது கைகளால் முட்டையை உடைக்காமல் எடுத்து முட்டை கொதிகலனில் வைப்பதும் உள்ளது. ரோபோவின் கால்களின் செயல்பாடும் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
இந்த மனித உருவ ரோபோ பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டெஸ்லாவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஜ உலகத்துடன் தொடர்பு கொள்ளவும், சமநிலையை செயல்படுத்தவும் (Balancing), Navigation போன்ற அம்சம்களைப் பொருத்தவும் Software உருவாக்கப்பட வேண்டும். இந்த சவால்களை தீர்க்க ஆழ்ந்த கற்றல், கணினி பார்வை, இயக்க திட்டமிடல், கட்டுப்பாடு, இயந்திரவியல் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்துவதாக Tesla நிறுவனம் கூறுகிறது.