வெனிசுலாவில் கோர விபத்து - 16 பேர் பலி
15 மார்கழி 2023 வெள்ளி 08:21 | பார்வைகள் : 6639
வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாகசோ நெடுஞ்சாலையில் இந்த திடீர் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த லாரி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் 17 வாகனங்கள் வரை சேதமடைந்ததுடன் வாகனங்களில் திடீரென தீயும் பற்றி எறிய தொடங்கியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர், அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan