Paristamil Navigation Paristamil advert login

காசாவில் பாலஸ்தீனியர்களை கொடூரமா கைதுசெய்யும் இஸ்ரேல் ராணுவம்

காசாவில் பாலஸ்தீனியர்களை கொடூரமா கைதுசெய்யும் இஸ்ரேல் ராணுவம்

15 மார்கழி 2023 வெள்ளி 08:40 | பார்வைகள் : 2655


இஸ்ரேலிய படையினர் காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை கைது செய்து  அரைநிர்வாணப்படுத்தி கடற்கரையோரத்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு எடுத்து சென்றுள்ளனர்.

பெய்ட் லகியா ஜபாலியா அகதிமுகாம் மற்றும் காசாவின் புறநகர் பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் கைகள் கட்டப்பட்டு கண்கள் மூடப்பட்ட நிலையில் டிரக்குகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிலர் தாங்கள் அடையாளம் தெரியாத முகாம்களிற்கு கொண்டு செல்லப்பட்டு நிர்வாணமாக கடும்குளிரில் கடும் தாகத்தின் மத்தியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

எங்களை கால்நடைகளை போல நடத்தினார்கள் கைகளில் இலக்கங்களை கூட எழுதினார்கள் என பெய்ட் லகியாவில் டிசம்பர் 7 திகதி கைதுசெய்யப்பட்ட 30 வயது கணிணி பொறியியலாளர் இப்ராஹிம் லுபாட் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டு பத்து வாரங்களின் பின்னர்மக்கள் வெளியேற்றப்பட்ட காசாவின் வடபகுதியை தனது இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஹமாஸ் குறித்த புலனாய்வு தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் தந்திரோபாயங்களில் சுற்றிவளைப்புகள் முக்கியமானவையாக மாறியுள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தந்திரோபாயம் எங்களிற்கு ஏற்கனவே பயனளித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் யாக்கோவ் அமிர்டிரோர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அவமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு இஸ்ரேலிய இராணுவம் சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டவர்கள் நடத்தப்படுகின்றனர் போதியளவு உணவையும் குடிநீரையும் அவர்களிற்கு வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளது.

காசாவின் ஹமாஸ் வலுவாக உள்ள இரண்டு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவபேச்சாளர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் வெடிகுண்டுகள் இல்லை என்பதை உறுதி செய்யவதற்காக அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது.

அவர்களை விசாரணை செய்த பின்னர் மீண்டும் ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ள  இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஹமாசுடன் தொடர்புள்ளவர்கள் என கருதப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல ஹமாஸ் உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களை விடுதலை செய்து தென்பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும்  இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

கைகள் கட்டப்பட்ட நபர்கள் தலையை குனிந்தபடிவீதிகளில் முழங்காலில் அமர்ந்திருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்கள் கடும் வேதனையை  ஏற்படுத்தியுள்ளன இது குறித்து மேலதிக விபரங்களை கோரியுள்ளோம் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியுமில்லர் தெரிவித்துள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுவர்கள் முதல் 70வயது இளைஞர்கள் வரை காணப்படுகின்றனர் இவர்களில் பலர் யுத்தத்திற்கு முன்னர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என கைதுசெய்யப்பட்ட 15 பேரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்