Paristamil Navigation Paristamil advert login

தோனியின் No.7 Jersey க்கு ஓய்வு - BCCI அறிவிப்பு

தோனியின் No.7 Jersey க்கு ஓய்வு - BCCI அறிவிப்பு

15 மார்கழி 2023 வெள்ளி 09:11 | பார்வைகள் : 1584


இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் MS Dhoniயின் No.7 Jersey இனி எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காது.

அதற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முடிவு செய்துள்ளது.

தோனியின் சர்வதேச ஓய்வுக்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு BCCI இந்த முடிவை எடுத்துள்ளது.

தோனிக்கு முன், சச்சின் டெண்டுல்கரின் No.10 Jerseyக்கும் இந்த கவுரவம் கிடைத்தது. 2017-ஆம் ஆண்டில், சச்சினின் 10ஆம் எண் ஜெர்சியும் நிரந்தரமாக ஓய்வு பெற்றது.

தோனி 15 ஒகஸ்ட் 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 2014-ஆம் ஆண்டிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தோனியின் No.7 ஜெர்சியை வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் ஒதுக்கப்பட மாட்டாது என்று BCCI அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

BCCI அறிக்கையின்படி, டீம் இந்தியா வீரர்கள், குறிப்பாக அறிமுக வீரர்களுக்கு டெண்டுல்கர் மற்றும் தோனி தொடர்பான எண்களை தேர்வு செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

தோனி ஜார்கண்டில் உள்ள Ranchiயில் (அப்போது பீகார்) பிறந்தார். அவரது தலைமையின் கீழ், 2013-ல் Championship Trophy, 2007-ல் T-20 மற்றும் 2011-ல் ODI World Cupயும் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அவர் டிசம்பர் 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தோனி 90 Test, 350 ODI மற்றும் 98 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 4,876, 10,773 மற்றும் 1,617 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 

IPL தொடரில் தோனி இதுவரை 190 போட்டிகளில் விளையாடி 4,432 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 

அவரது தலைமையின் கீழ், Chennai Super Kings (CSK) 2010 மற்றும் 2011-ல் தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றது.

பழம்பெரும் வீரர்களின் ஜெர்சி எண்களுக்கு ஓய்வு அளிக்கும் பழைய பாரம்பரியம் விளையாட்டுகளில் உள்ளது. 

இத்தாலிய கால்பந்து லீக் Serie A Club Napoliயில் எந்த வீரரும் No.10 Jerseyயை அணிவதில்லை, ஏனெனில் இந்த எண்ணை ஜாம்பவான் Diego Maradona அணிந்திருந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்