SMIC : அடிப்படை ஊதியம் அதிகரிப்பு!
15 மார்கழி 2023 வெள்ளி 09:36 | பார்வைகள் : 6928
2024 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் அடிப்படை ஊதியம் (SMIC அதிகரிப்புக்கு உள்ளாகுவதாக அறிய முடிகிறது.
பணவீக்கத்தை கணக்கிட்டு தானியங்கி முறையில் அதிகரிக்கும் இந்த அடிப்படை ஊதியம், ஜனவரி 1 ஆம் திகதி 1.13% சதவீதத்தால் அதிகரிக்கிறது. ஒருமணிநேரத்துக்கான அடிப்படை ஊதியம் 11.52 யூரோக்களில் இருந்து 11.65 யூரோக்களாக அதிகரிக்கிறது.
இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ஐரோப்பா முழுவதும் பணவீக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 7 தடவைகள் அடிப்படை ஊதியம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.