சீரற்ற காலநிலை - வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சி

15 மார்கழி 2023 வெள்ளி 09:54 | பார்வைகள் : 12829
கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களிலுள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் பொது மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அத்தோடு, தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இன்று (15) இப்பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பாக கிராம சேவையாளர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1