மருந்தகங்களில் - காகிதங்களுக்கு பதிலாக QR முறையிலான அறிவுறுத்தல்கள்!
15 மார்கழி 2023 வெள்ளி 12:28 | பார்வைகள் : 4031
மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் வழங்கப்படும் காகிதத்தினால் அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு (les notices) பதிலாக QR முறை பயன்படுத்தும் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.
மருந்துகள் வரும் பெட்டிகளின் உள்ளே குறித்த மருந்து தொடர்பான விபரங்கள், அல்லது மருத்துவக்குறிப்புகள் கொண்ட தாள்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நடைமுறையினால் ஏராளமான காகிதஙக்ள் வீணடிக்கப்படுகின்றன. இதனை குறைக்கும் விதமாக QR குறியீடு மட்டும் பெட்டிகளில் அச்சடிக்கப்பட்டு, மருந்து தொடர்பான விபரங்கள் அதில் பதியப்பட்டிருக்கும். அல்லது இணையத்தளத்துக்குச் சென்று அதில் வாசிக்கக்கூடியவாறு இருக்கும்.
பிரான்சில் விற்பனையாகும் பிரபலமான மருந்துகளுக்கு இந்த முறை வரும் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பரீட்சாத்தமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
அதன் பின்னர் அவ்வாண்டின் நடுப்பகுதியில் இருந்து நிரந்தரமாக அனைத்து மருந்துகளுக்கும் நடைமுறைக்கு வரும் என தேசிய மருந்தங்களுக்கான பாதுகாப்புச் சபை (ANSM) அறிவித்துள்ளது.