Paristamil Navigation Paristamil advert login

2026ல் இந்திய பொருளாதாரம் புது சாதனை படைக்கும்: அரவிந்த் பனகாரியா

2026ல் இந்திய பொருளாதாரம் புது சாதனை படைக்கும்: அரவிந்த் பனகாரியா

16 மார்கழி 2023 சனி 11:20 | பார்வைகள் : 1371


2026-ல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாவது மிகப்பெரிய  பொருளாதார  நாடாக இந்திய மாறும் என  முன்னாள் நிடி ஆயோக் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  அரவிந்த் பனகாரியா பேசியது,  "இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் உச்சியில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.

ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023 இல் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2026 இல் 4.9 டிரில்லியன் டாலராகவும், 2027 இல் 5.1 டிரில்லியன் டாலராகவும் உயரும்.

கடந்த 2022ம் ஆண்டு 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஜப்பான், 2027 ம் ஆண்டில் 5.03 டிரில்லியனை எட்டுவதற்கு தற்போதைய டாலர் மதிப்பில் 3.5 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை தக்க வைக்க வேண்டும்.

இந்த மதிப்பீட்டின்படி 2026 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக  இந்தியா மாறும், தற்போதைய டாலர் மதிப்பில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அந்த ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும், மேலும் 2027 இல் 5.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்