ஹமாஸ் அமைப்பினால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் சடலமாக மீட்பு!

16 மார்கழி 2023 சனி 08:56 | பார்வைகள் : 8418
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதியிருந்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி சென்றனர்.
இவ்வாறான நிலையில், காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
இன்னும் 134 பேர் காசாவின் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட இலியா டுலெட்னோ (வயது 28), நிக் பைசர் (வயது 19), ரொன் ஷெர்மன் ஆகிய மூன்று பேரின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1