Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ராணுவத்துக்கு 15 பகுதிகளை வழங்கும் பிரபல நாடு....

அமெரிக்க ராணுவத்துக்கு 15 பகுதிகளை வழங்கும் பிரபல நாடு....

16 மார்கழி 2023 சனி 09:06 | பார்வைகள் : 3320


மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பின்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

இதன் தொடர்ச்சியாக பின்லாந்து அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது தொடர்பான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பின்லாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

மேலும் இந்த ஒப்பந்தம் வரும் டிசம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டனில் வைத்து கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் பட்சத்தில் அமெரிக்கா ராணுவத்தின் ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள், படை வீரர்களுக்கான தளங்கள் போன்றவற்றை அமைக்க பின்லாந்து தங்கள் நாட்டில் உள்ள 15 இடங்களை அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கும்.

இதில் விமான தளங்கள், கடற்படை மற்றும் பயிற்சி மையங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர், இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க தளங்களை நாட்டின் கிழக்கு பகுதியில்  (அதாவது ரஷ்ய எல்லைக்கு அருகில்) நிலைநிறுத்துவதை கொண்டு இருக்கவில்லை தெரிவித்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்