100 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த எம்.எஸ்.தோனி!
16 மார்கழி 2023 சனி 09:24 | பார்வைகள் : 1882
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தோனி தொடர்ந்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுக்கு பிறகும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்குவார் என வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர், தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.