Paristamil Navigation Paristamil advert login

பிரபு மகளின் இரண்டாவது திருமணம்... வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபு மகளின் இரண்டாவது திருமணம்...  வெளியான அதிர்ச்சி தகவல்!

16 மார்கழி 2023 சனி 12:29 | பார்வைகள் : 6509


நடிகர் பிரபு மகளின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்தது. முதல் கணவரை ஐஸ்வர்யா குறுகிய காலத்திலேயே பிரிய என்ன காரணம் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் விஷால், ஷாலினி அஜித் என திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம். கடந்த 2009ம் ஆண்டு குணால் என்பவரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார் ஐஸ்வர்யா. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இவர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று நடந்தது.

தனது கணவர் குணாலை ஐஸ்வர்யா பிரிய என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது. பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை, அவருடைய சகோதரி தேன்மொழியின் மகனுக்குத் தான் திருமணம் செய்து வைத்தார்கள். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருடைய சொத்துக்களை பிரிக்கும் பொழுது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரி தேன்மொழி ஆகியோருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட, இதனை அடுத்து அண்ணன் பிரபு மீது சகோதரி தேன்மொழியும் வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த மனக்கசப்பு காரணமாகத்தான் ஐஸ்வர்யாவும் குணாலும் பிரிந்துள்ளனர் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்