தனுஷ் படத்தில் கதாநாயகியாகும் அனிகா சுரேந்திரன்

16 மார்கழி 2023 சனி 15:07 | பார்வைகள் : 5367
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்ததைத் தொடர்ந்து தற்போது அவரது அக்கா மகனை கதாநாயகனாக வைத்து தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கின்றார். தற்போது இதில் கதாநாயகியாக நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகையான அனிகா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அவரின் மகளாக நடித்து கவனம் பெற்றார். மலையாளத்தில் நாயகியாக நடித்துள்ள இவர் தமிழில் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது தனுஷின் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.