Paristamil Navigation Paristamil advert login

நெத்திலி கருவாடு தொக்கு

நெத்திலி கருவாடு தொக்கு

16 மார்கழி 2023 சனி 15:32 | பார்வைகள் : 2521


அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன்,மீன் , முட்டை ,கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். அதிலும் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு புட்டு, கருவாடு மசாலா என்று பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம். வேறு எதையும் தேட மாட்டார்கள். அதன் மணமும் சுவையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். அதனை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும்

 தேவையான பொருட்கள் 

1/4 கி நெத்திலி கருவாடு 
2 தக்காளி 2 
பெரிய வெங்காயம் 2 
பச்சை மிளகாய் 1 
கொத்து கறிவேப்பிலை 2 
 மிளகாய் தூள் 1 டீஸ்பூன் 
சோம்பு தூள் 1/4 டீஸ்பூன் 
கடுகு            1/4 டீஸ்பூன் 
வெந்தயம்    1/4 டீஸ்பூன் 
சோம்பு    1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள்  உப்பு தேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை 

 முதலில் கருவாடை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு,‌வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். 

 பின் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

 வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சோம்பு தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.  
அதன்பிறகு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும். 

 பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். 
 அவ்வளவுதான் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்