நோர்து-டேம் தேவாலயத்தின் கூரையில் புதிதாக அமைக்கப்படும் ‘சேவல்’ சிலை!!
16 மார்கழி 2023 சனி 15:54 | பார்வைகள் : 4014
நோர்து-டேம் தேவாலயத்தின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த சேவல் சிலை தீ விபத்தில் சேதமடைந்ததை அடுத்து, தற்போது புதிய சேவல் சிலை அங்கு நிறுவப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு நோர்து-டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் தேவாலயத்தின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த சேவல் சில சேதமடைந்தது. இந்நிலையில் புதிய சேவல் சிலை ஒன்று அங்கு நிர்மானிக்கப்பட உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட இந்த சேவல் சிலையானது கிறிஸ்துவின் முட்கிரீடத்தின் ஒரு துண்டு என கருதப்படுகிறது.
நோர்து-டேம் தேவாலயம் இன்னும் ஒருவருடத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்க பரிசுத்த பாப்பரசரை அழைக்கும் முனைப்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளார்.
இந்நிலையில், நோர்து-டேம் தேவாலயத்தின் கூரையில் (தரையில் இருந்து 96 மீற்றர் உயரத்தில்) இந்த சேவல் சிலை நிர்மானிக்கப்பட உள்ளது.
(புகைப்படத்தில் : பரிசின் பேராயர் Monseigneur Laurent Ulrich குறித்த சேவல் சிலையுடன்)