Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் மரங்களால் காத்திருக்கும் ஆபத்து!

கொழும்பில் மரங்களால் காத்திருக்கும் ஆபத்து!

17 மார்கழி 2023 ஞாயிறு 02:55 | பார்வைகள் : 1239


பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதன்படி பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329 ஆபத்தில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், கொழும்பு நகரில் உள்ள ஆபத்தான 360 மரங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பொலிசார் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் ஆபத்தான 214 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை கூறுகிறது.

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழு அண்மையில் கொழும்பு நகரில் அழிந்து வரும் மரங்களை ஆய்வு செய்ததுடன், அதன்படி 700 மரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

நாட்டின் எந்தவொரு நகரத்திலும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்ட மரங்களை வெட்டுவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்