Budget de l’État : மீண்டும் 49.3 ஐ கையிலெடுத்த பிரதமர்!!
17 மார்கழி 2023 ஞாயிறு 06:47 | பார்வைகள் : 3623
2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பகுதி பகுதியான பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் Élisabeth Borne, தனது ஆயுதமான 49.3 ஐ மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு பகுதியான அரசுக்கான வருவாயை «recettes» கொண்ட ’Budget de l’État’ நேற்று சனிக்கிழமை இரவு பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. இதனை வாக்குகள் இன்றி நிறைவேற்ற 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் பயன்படுத்தினார்.
இந்த அரசியலமைப்பு சட்டமானது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஒரு சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கிறது.
பிரதமர் Élisabeth Borne, 22 ஆவது தடவையாக இதனை அவர் நேற்று பயன்படுத்தினார். இதனால் பாராளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. La France insoumise கட்சியினர் உடனடியாக நம்பிக்கை இல்லா பிரேரணை (motion de censure) கொண்டுவந்தனர்.
பின்னர் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு வாக்கெடுக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற 289 வாக்குகள் தேவை எனும் நிலையில், 75 வாக்குகள் மட்டுமே பதிவானது.
அதயடுத்து, மீண்டும் புதிய நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளதாக உடனடியாக அறிவித்தனர்.