Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் உளவாளியை தூக்கிலிட்ட பிரபல நாடு

இஸ்ரேலின் உளவாளியை தூக்கிலிட்ட பிரபல நாடு

17 மார்கழி 2023 ஞாயிறு 08:27 | பார்வைகள் : 4750


ஈரானின் கைது செய்யப்பட்ட உளவாளி வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் ரகசிய தகவல்களை வெளியிடும் குற்றத்தில் அந்த உளவாளி தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அந்த உளவாளி சஹீதானில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.


உளவாளியின் விவரங்கள் எதுவும் அறிக்கையில் பகிரப்படவில்லை. 

கடந்த 2022 ஏப்ரலில், இஸ்ரேலின் உளவாளி அமைப்பான மொசாடோடுடன் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்ததாக ஈரான் தெரிவித்தது.

தற்போது தூக்கிலிடப்பட்ட நபர் அவர்களில் ஒருவரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

உளவாளிகளைப் பயன்படுத்தி போருக்கு வழி செய்வதாக ஈரானும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்