நினைப்பதை Type செய்தால் போதும், புதிய படம் ரெடி., Google அறிமுகப்படுத்தும் Imagen-2

17 மார்கழி 2023 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 5292
AI தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை உருவாக்கும் புதிய Google அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் Imagen-2 என்ற புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் type செய்யும் போது வார்த்தைகளை படங்களாக மாற்றும் புதிய கருவி இது. இது Google-ன் Vertex AI பயனர்களுக்குக் கிடைக்கும்.
Imagen-2 நீங்கள் வார்த்தைகளை டைப் செய்வதன்மூலம் சிறந்த படங்களை உருவாக்க அனுமதிக்கிறது. இது Google DeepMind உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
பயனர்கள் டைப் செய்யும் வார்த்தைகளில் இருந்து அழகான படங்களை உருவாக்க முடியும்.
படங்களை உருவாக்க வெவ்வேறு மொழிகளில் வார்த்தைகளை உள்ளிடலாம்.
நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான லோகோக்களை உருவாக்கி படத்தில் சேர்க்கலாம்.
படத்தில் உள்ளதைச் சரியாகப் பதிலளித்து, தலைப்புகளைச் சேர்க்கலாம்.
Chinese, இந்தி, ஜப்பானிய, கொரியன், போர்த்துகீசியம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் படங்களை டைப் செய்யலாம்.
இந்த புதிய இமேஜன் 2 பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்தும் அதிக அக்கறை கொண்டுள்ளது. அது உருவாக்கும் படங்கள் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு Google-ன் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1