Paristamil Navigation Paristamil advert login

ஏலத்தில் விடப்படும் மெஸ்ஸியின் உலகக்கோப்பை Jersey

 ஏலத்தில் விடப்படும் மெஸ்ஸியின் உலகக்கோப்பை Jersey

17 மார்கழி 2023 ஞாயிறு 08:56 | பார்வைகள் : 1207


உலகக்கோப்பை தொடரின்போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சிகள் பல கோடிகளுக்கு ஏலம் போயுள்ளன.

2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 35 ஆண்டுகளுக்கு பிறகு 3 -வது உலகக்கோப்பையை வென்றது.

இறுதிச்சுற்றில் பிரான்ஸுடன் மோதிய போது லியோனல் மெஸ்ஸி 7 கோல்களை அடித்தார். 

மேலும், உலகக்கோப்பை தொடரில் 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி நியூயார்க்கில் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜெண்டினா அணியின் jerseys ஏலம் விடப்பட்டன.

ஏலத்தில் மெஸ்ஸியின் இந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளன. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.65 கோடியாகும்.

இதுகுறித்து ஏலத்தை நடத்திய நிறுவனம் சார்பில், "ஒரு வீரருக்கு சொந்தமான பொருள் அதிக விலைக்கு விற்பனையாவது இதுவே முதல்முறையாகும். மெஸ்ஸியின் 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜெர்சியும் இருந்ததால் தான் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.          

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்