பிரமாண்டமான சரித்திர கதையில் சிம்பு?

17 மார்கழி 2023 ஞாயிறு 10:03 | பார்வைகள் : 9968
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றி, தலையில் பெரிய அளவில் முடி வளர்த்து வரும் சிம்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சில தற்காப்பு கலை பயிற்சி பெற்று விட்டு நாடு திரும்பினார். என்றாலும் அப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிம்பு நடிக்கும் 48வது படம் பாகுபலி படத்திற்கு இணையாக ஒரு பிரமாண்டமான சரித்திர கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற தாமதமாகி வருவதாகவும், தொடர்ந்து சிம்பு உடற்பயிற்சி மூலம் தனது பாடி லாங்குவேஜை பராமரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும் ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025