கொழும்பில் கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்!
17 மார்கழி 2023 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 7708
கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சேதவத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan