Paristamil Navigation Paristamil advert login

’மிஸ் 49.3’ - பிரதமரை கேலிக்குள்ளாக்கும் இணையவாசிகள்!!

’மிஸ் 49.3’ - பிரதமரை கேலிக்குள்ளாக்கும் இணையவாசிகள்!!

17 மார்கழி 2023 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 3495


பிரான்சுக்கான 2024 ஆம் ஆண்டின்  ‘மிஸ்.பிரான்ஸ்’ அழகி நேற்று சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே மகுடத்தை பிரதமர் Élisabeth Borne இற்கும் அணிவித்து அழகு பார்த்துள்ளனர் இணையவாசிகள்.

அழகிப்போட்டியில் பங்கேற்பவர்கள் அணியும் ‘MISS FRANCE' பட்டியினை, ‘MISS 49.3' என மாற்றி அதனை பிரதமர் Élisabeth Borne இற்கு அணிவித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் அழகிப்போட்டி இடம்பெற்ற அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் 22 ஆவது தடவையாக பயன்படுத்தினார். 

​​​​​​

அதையடுத்தே இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்