Paristamil Navigation Paristamil advert login

கேரளாவில் கண்டறியப்பட்டது கொரோனா தொற்றின் புதிய வகை..

 கேரளாவில் கண்டறியப்பட்டது  கொரோனா தொற்றின் புதிய வகை..

17 மார்கழி 2023 ஞாயிறு 12:58 | பார்வைகள் : 1853


கொரோனாவின் உருமாறிய புதிய வகையான ஜே.என்.,1 பாதிப்பு, முதன்முறையாக கேரளாவில் கடந்த 8ம் தேதி கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் கொரோனா தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்டது. இது, பல்வேறு நாடுகளுக்கும் பரவி, மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறிந்து மக்களுக்கு செலுத்தப்பட்டன. அதன்பின் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், கேரளாவில், 79 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த மாதம் 18ம் தேதி ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவரது மாதிரியை பரிசோதித்தபோது புதிய வகையான கொரோனா கண்டறியப்பட்டது.

இது, ஜே.என்.,1 என்ற புதிய வகை கொரோனா என்பது தெரியவந்தது.

எனினும், அம்மூதாட்டிக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்த நிலையில், சில நாட்களில் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நம் நாட்டில் கண்டறியப்படும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுவதாகவும், பெரும்பாலானோருக்கு வீட்டுத் தனிமையிலேயே சரியாகி விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்