Paristamil Navigation Paristamil advert login

இண்டியா கூட்டணி கூட்டம் ஸ்டாலின் பேச போவது என்ன?

இண்டியா கூட்டணி கூட்டம் ஸ்டாலின் பேச போவது என்ன?

17 மார்கழி 2023 ஞாயிறு 13:03 | பார்வைகள் : 1773


வரும், 19ல் டில்லி செல்லும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அங்கு நடக்கும், 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கிறார். 

அந்தக் கூட்டத்தில், எந்த விஷயங்களை வலியுறுத்துவது என்பதற்கான ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: இண்டியா கூட்டணி பெரிய அளவில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து செயல்பட்டவர், ஸ்டாலின். ஆனால், அவர் நினைத்தது போல, கூட்டணி கட்சியினர் செயல்பட மறுக்கின்றனர். 

குறிப்பாக, பா.ஜ.,வுக்கு அடுத்த நிலையில் இருக்கும் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக செல்ல மறுக்கிறது. அதனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. 

இதை உணராமல், இண்டியா கூட்டணி தொடர்ந்தால், பெரிய அளவில் சாதிக்க முடியாது. டில்லி கூட்டத்தில், இந்த விஷயத்தை மையப்படுத்தி பேசும்படி, ஸ்டாலினிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர். 

பார்லிமென்டிற்குள் அத்துமீறி புகுந்து கலாட்டா செய்தவர்களுக்கு பின்னணியில், பெரும் சதி இருக்கிறது; அதை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என்று வற்புறுத்திய கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.,வினர், கூட்டத் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். 

அதற்கு, இண்டியா கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல கட்சிகள், இதில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கின்றன. 

இப்படிப்பட்ட பிரச்னைகளில் கூட, எதிர்க்கட்சியினர் ஒன்றுபடாமல் இருப்பது, கூட்டணிக்கே பலவீனமாக அமைந்துள்ளது. இதையும் கூட்டத்தில் பேச வேண்டும் என, ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. 

அதேபோல, சென்னையின் பெருமழை, வெள்ளத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு போதுமான நிதி கொடுக்கவில்லை. இதற்காக, தி.மு.க., மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறது. இதில், கூட்டணி கட்சிகள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இது தொடர்பாகவும், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பேச வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. <br>இவ்வாறு அக்கட்சி  வட்டாரங்கள் கூறின. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்