Essonne : கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து! - இருவர் படுகாயம்!!
17 மார்கழி 2023 ஞாயிறு 13:52 | பார்வைகள் : 9281
மகிழுந்து ஒன்று பாதசாரிகள் சென்ற பாதைக்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Ris-Orangis (Essonne) நகரில் இவ்விபத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்றது. rue Jules-Guesde வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, பாதசாரிகளின் பாதையில் நுழைந்தது. இதில் வீதியில் நடந்து சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.
பின்னர் காவல்துறையினர் தலையிட்டு மகிழுந்து சாரதியை கைது செய்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


























Bons Plans
Annuaire
Scan